Saturday, April 16, 2011

INTERNATIONAL MARKETING







Globalization of Markets and Competition: Trade is increasingly global in scope today. There are several reasons for this. One significant reason is technological—because of improved transportation and communication opportunities today, trade is now more practical. Thus, consumers and businesses now have access to the very best products from many different countries. Increasingly rapid technology lifecycles also increases the competition among countries as to who can produce the newest in technology. In part to accommodate these realities, countries in the last several decades have taken increasing steps to promote global trade through agreements such as the General Treaty on Trade and Tariffs, and trade organizations such as the World Trade Organization (WTO), North American Free Trade Agreement (NAFTA), and the European Union (EU).
Stages in the International Involvement of a Firm. We discussed several stages through which a firm may go as it becomes increasingly involved across borders. A purely domestic firm focuses only on its home market, has no current ambitions of expanding abroad, and does not perceive any significant competitive threat from abroad. Such a firm may eventually get some orders from abroad, which are seen either as an irritation (for small orders, there may be a great deal of effort and cost involved in obtaining relatively modest revenue) or as "icing on the cake." As the firm begins to export more, it enters the export stage, where little effort is made to market the product abroad, although an increasing number of foreign orders are filled. In the international stage, as certain country markets begin to appear especially attractive with more foreign orders originating there, the firm may go into countries on an ad hoc basis—that is, each country may be entered sequentially, but with relatively little learning and marketing efforts being shared across countries. In the multi-national stage, some efficiencies are pursued by standardizing across a region (e.g., Central America, West Africa, or Northern Europe). Finally, in the global stage, the focus centers on the entire World market, with decisions made optimize the product’s position across markets—the home country is no longer the center of the product. An example of a truly global company is Coca Cola.
Note that these stages represent points on a continuum from a purely domestic orientation to a truly global one; companies may fall in between these discrete stages, and different parts of the firm may have characteristics of various stages—for example, the pickup truck division of an auto-manufacturer may be largely domestically focused, while the passenger car division is globally focused. Although a global focus is generally appropriate for most large firms, note that it may not be ideal for all companies to pursue the global stage. For example, manufacturers of ice cubes may do well as domestic, or even locally centered, firms.
Some forces in international trade. The text contains a rather long-winded appendix discussing some relatively simple ideas. Comparative advantage, discussed in more detail in the economics notes, suggests trade between countries is beneficial because these countries differ in their relative economic strengths—some have more advanced technology and some have lower costs. The International Product Life Cycle suggests that countries will differ in their timing of the demand for various products. Products tend to be adopted more quickly in the United States and Japan, for example, so once the demand for a product (say, VCRs) is in the decline in these markets, an increasing market potential might exist in other countries (e.g., Europe and the rest of Asia). Internalization/transaction costs refers to the fact that developing certain very large scale projects, such as an automobile intended for the World market, may entail such large costs that these must be spread over several countries.

INTRODUCTION TO MARKETING




Marketing. Several definitions have been proposed for the term marketing. Each tends to emphasize different issues. Memorizing a definition is unlikely to be useful; ultimately, it makes more sense to thinking of ways to benefit from creating customer value in the most effective way, subject to ethical and other constraints that one may have. The 2006 and 2007 definitions offered by the American Marketing Association are relatively similar, with the 2007 appearing a bit more concise. Note that the definitions make several points:
·         A main objective of marketing is to create customer value.
·         Marketing usually involves an exchange between buyers and sellers or between other parties.
·         Marketing has an impact on the firm, its suppliers, its customers, and others affected by the firm’s choices.
·         Marketing frequently involves enduring relationships between buyers, sellers, and other parties.
·         Processes involved include “creating, communicating, delivering, and exchanging offerings.
Delivering customer value. The central idea behind marketing is the idea that a firm or other entity will create something of value to one or more customers who, in turn, are willing to pay enough (or contribute other forms of value) to make the venture worthwhile considering opportunity costs. Value can be created in a number of different ways. Some firms manufacture basic products (e.g., bricks) but provide relatively little value above that. Other firms make products whose tangible value is supplemented by services (e.g., a computer manufacturer provides a computer loaded with software and provides a warranty, technical support, and software updates). It is not necessary for a firm to physically handle a product to add value—e.g., online airline reservation systems add value by (1) compiling information about available flight connections and fares, (2) allowing the customer to buy a ticket, (3) forwarding billing information to the airline, and (4) forwarding reservation information to the customer.
It should be noted that value must be examined from the point of view of the customer. Some customer segments value certain product attributes more than others. A very expensive product—relative to others in the category—may, in fact, represent great value to a particular customer segment because the benefits received are seen as even greater than the sacrifice made (usually in terms of money). Some segments have very unique and specific desires, and may value what—to some individuals—may seem a “lower quality” item—very highly.
Some forms of customer value. The marketing process involves ways that value can be created for the customer. Form utility involves the idea that the product is made available to the consumer in some form that is more useful than any commodities that are used to create it. A customer buys a chair, for example, rather than the wood and other components used to create the chair. Thus, the customer benefits from the specialization that allows the manufacturer to more efficiently create a chair than the customer could do himself or herself. Place utility refers to the idea that a product made available to the customer at a preferred location is worth more than one at the place of manufacture. It is much more convenient for the customer to be able to buy food items in a supermarket in his or her neighborhood than it is to pick up these from the farmer. Time utility involves the idea of having the product made available when needed by the customer. The customer may buy a turkey a few days before Thanksgiving without having to plan to have it available. Intermediaries take care of the logistics to have the turkeys—which are easily perishable and bulky to store in a freezer—available when customers demand them. Possession utility involves the idea that the consumer can go to one store and obtain a large assortment of goods from different manufacturers during one shopping occasion. Supermarkets combine food and other household items from a number of different suppliers in one place. Certain “superstores” such as the European hypermarkets and the Wal-Mart “super centers” combine even more items into one setting.
The marketing vs. the selling concept.

என்னதான் நடக்கிறது துபாயில்?

'மாஷே! மாசம் சம்பள்ம் கூட்டுவோ?' என்றார் அலுவலக நண்பர்
' மாசம் சம்பளம் கிட்டுவோ?ன்னு நோக்கு' என்றார் இன்னொரு நண்பர்
இது போன்ற நகைச்சுவைகள் இன்று துபாயில் சாதாரணம் துபாயின் இன்றைய நிலையை விவரிப்பதென்றால் இப்படித்தான் சொல்லியாக வேண்டும்



எல்லாம் முடிந்து விட்டது.
துபாய் இனி அவ்வளவுதான்'
எல்லாரும் திரும்பிப் போய் விட்டார்கள்.
வேலை கிடைக்கவில்லை.
சம்பளக் குறைப்பு செய்கிறார்கள்
ஆட்களை பணியிலிருந்து நீக்குகிறார்கள்
நீண்ட நாள் விடுப்பில் அனுப்புகிறார்கள்

எல்லாம் உண்மைதான். இது ஏன் நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? இதன் தீர்வு என்ன என்பது குறித்த சில விசயங்களை அணுகலாம்

துபாயில் பொருளாதார நெருக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதென்னவோ உண்மை. பலரும் எண்ணுவது போல துபாய் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடன்று. அதன் முக்கிய வருமானம் வர்த்தகம் மற்றும் மறு ஏற்றுமதி ( Re-export) தான். நவீன நகரமாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் துபாயின் கடும் பிரயத்தனம் அதற்கு 40% வருமானத்தை சுற்றுலா மூலமாக ஈட்டித் தந்திருக்கிறதென்பது இன்னுமொரு ஆச்சரியம். (எத்தனையோ வசதிகளும் வாய்ப்பும் இருந்தும் இந்திய சுற்றுலா அதன் மொத்த வருமானத்தில் எத்தனை சதவீதம்? என்பதை இங்கே நினைவில் கொண்டால் துபாயின் கடும் உழைப்பும் அந்நகரத்தை சுற்றுலாத் தளமாக உருவாக்க அது எடுத்த முயற்சிகளும் எவ்வ்ள்வு பிரம்மாண்டமானவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் சுடு வெயிலும், மணற் குன்றுகளும் தவிர்த்த இயற்கை வளங்கள் துபாயில் அதிகமில்லை.இருந்தும் இதனைச் சுற்றுலாத் தளமாக மாற்ற முடிந்திருப்பதில் துபாயின் அபரிமிதமான முயற்சியை நாம் உணர்ந்து கொள்ள
முடியும்)

ஹாங்காங் இங்கிலாந்திடமிருந்து சீனாவுக்குக் கைமாறியபோது அங்கிருந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இடம் மாறக் கூடுமென்ற யூகங்களும் அதுகுறித்த சர்ச்சைகளும் எழுந்தபோது துபாயை முதலீட்டாளர்களின் சொர்க்கமாக மாற்றுவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை இங்கே முதலீடு செய்ய வைத்து வர்த்தகத்தைப் பெருக்க துபாய் திட்டமிட்டது. ஆனால், இசுலாமிய நாடுகளுக்கு நடுவில் முழுமையான பொருளாதார சுதந்திரம் கொண்ட இயக்கம் சாத்தியமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

இந்தச் சூழலில் உருவாக்கப்பட்டதுதான் நான்காவது குறுக்குப் பாலம் கடந்தால் ஜெபல் அலி வரை எதுவுமே இல்லை என்ற நிலையில் அங்கே உருவாக்கப்பட்ட 'இணைய நகரம்' (Internet city) மற்றும் அதனோடு ஒட்டி அமைந்த 'ஊடக நகரம்' (Media city) இரண்டும் அது உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் - புதிய நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் - கேலிக்கூத்தாகக் கருதப்பட்டது. அதைப் போலவே அதற்கு அருகாமையில் உருவாக்கப்பட்ட 'துபாய் மெரினா'வும்.

இந்த நகரங்களுக்குள் மைக்ரோசாப்ஃட், கேனன், சன் மைக்ரோ சிஸ்டம், சி.என்.என், பி.பி.சி போன்ற ப்ன்னாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைமையகத்தையும் இங்கே கொண்டு வந்ததில் அந்தத் திட்டங்கள் அமோக வெற்றி பெற்றதால் இணைய நக்ரம் - விரிவு-1 , விரிவு-2 ஊடக் நகரம் விரிவு-1 விரிவு-2 விரிவு-3 என்று வளர்ச்சி மெதுவாகத் துவங்கியது
இதே காலகட்டத்தில்தான் இலவ்ச நுழைமதிகளுடன் கூடிய அடுக்ககத்தை வெளிநாட்டவரும் வாங்கலாமென்ற திட்டத்துடன் புதிய துபாய் (New Dubai) உருவாகத் துவங்கியது. இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பும், நிதிக்குவியலும் துபாயில் கட்டுமானத் துறையில் அதுவரை இல்லாத புதிய வேகத்துடன் அரங்கேறத் துவங்கியது.

திடீர் இட்லி திடீர் சாம்பார் மாதிரி திடிரென்று துவங்கியது துபாயின் கட்டுமானப் பணிகள். கற்பனையில் எட்டாத திட்டங்கள். ஆரமபத்தில் இப்படி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அடைந்த மகத்தான் வெற்றி தந்த உற்சாகம் மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களை முதலீடுகளைக்குவிக்க வைததது. இந்தியர்களின் கறுப்புப்பணங்களை வெள்ளையாக்கும் முயற்சியில் இந்தக் கட்டுமான முதலீடும் முக்கிய பங்கு வகித்தது.

புதிய கட்டடங்கள், புதிய பிரம்மாண்ட திட்டங்கள், புதிய வளர்ச்சிப் பணிகள் அறிவிக்கப்பட்டதால் பெரும் நிறுவனங்கள் எந்த விலை கொடுத்தேனும் பொறியாளர்கள், தொழிலாளர்களை விலைக்கெடுக்க முனைந்தன. 15000 திர்ஹாம் சம்பளம் என்பது ஓரிரு ஆன்டுகளில் 40000 வரை உயர்ந்தது. ஒரே நிறுவனத்தில் பல காலமாக இருந்தவர்கள் கூட பணிமாற்றம் செய்து கொண்டனர். திட்டப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் துணைக்கண்டத்திலிருந்து பணியாளர்கள் தருவிக்கப்பட்டனர். துபாயின் எல்லா இடஙக்ளிலும் கிரேன் பறவைகள் தங்கள் இயந்திரச் சிறகுகளை விரிக்கத் துவங்கின.

புதியவர்களின் வருகையால் வாடகைக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பானது. இந்தத் திடீர் வளர்ச்சியை கட்டட உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். வாடகை உயர்ந்தது கணிசமாக. இதே சூழலில் கச்சா எண்ணெயின் அதீதமான விலை உயர்வு இங்கேயும் டீசல் விலையை உயரச் செய்தது. அன்றாட உணவுப் பொருட்களின் விலையும் அதீதமாக உய்ரத் துவங்கியது. இந்தப் பணப்புழக்கத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த வங்கிகள் தாராளமாகக் கடன் அட்டைகளை அள்ளி வீசின. திருப்பித் தரும் சக்தி இருக்கிறதா என்பதை ஆராயாமல் இலகுவாகக் கடன்களையும் அள்ளி வழங்கின. அப்போதே சாமானியர்களிடம் முணுமுணுப்பு துவங்கிவிட்டதென்றாலும், அசுர வளர்ச்சி நிரந்தரமானதென்றெண்ணியவர்கள் எவர் காதிலும் இது விழவில்லை.

இதே நேரத்தில் பய்னாளர், உரிமையாளர் என்ற நிலை தாண்டி இடைத்தரகர்கள் என்ற வழக்கமான மூன்றாவது ஜாதி நுழையத் துவங்கியது. இவர்கள் நுழைந்ததும் கட்டடங்களின் விலைகள் தாறுமாறாக ஏறத் துவங்கின. வெறும் 800,000 திர்ஹாமுக்கு விற்கப்பட்ட வீடுகள் ஆறே மாதத்தில் 1,500,000 திர்ஹாமாக மாறியது. இலாபம் ஆறே மாதங்களில் 700,000 திர்ஹாம். இந்தியப் பணத்தில் சுமார் 85லட்ச ரூபாய்கள். ஆனால் இந்த இடைத் தரகர்கள் மொத்தமாக 800,000 கொடுத்து வாங்குவதில்லை. மாறாக அதில் 10 விழுக்காடு கொடுத்து விட்டு மீதிக்கு வங்கியிடமிருந்து கடன் பெறும் அருகதை இருப்பதை உறுதி செய்தால் மட்டும் போதுமானது என்பதால் அடுத்த ஆறு மாதத்தில் அப்படியே மாற்றிக் கொடுத்து விடுவார்கள். வெறும் 80,000 செலவு செய்து ஆறே மாதத்தில் அதை 700,000 ஆக மாற்ற முடியுமென்றால் அதை விட இலாபகரமான தொழில் வேறென்ன இருக்க முடியும்? கொள்ளை இலாபம் தந்த இந்த வியாபாரம் ஆரம்பத்தில் வெளியில் தெரியாமல் அமைதியாக நடந்தது.

ஆனால் ஒரு புறத்திட்டு (Project) அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒட்டு மொத்தமாக விற்றுத் தீர்வதன் மர்மத்தைப் பற்றி அறியத் துவங்கிய நம்மவர்களுக்கு இதன் பின்னணி விளங்கியது அவர்களும் இந்தச் சூதாட்டத்தில் ஈடுப்டத் துவங்கினர். முதலீடு செய்ய போதுமான பணம் இல்லாத நிலையில் நான்கைந்து பேர் கூட்டாக சேர்ந்து பணத்தை முதலீடு செய்தனர். பின்னர் விற்று கிடைத்த இலபாத்தைப் பகிர்ந்து கொண்டனர். மொத்தமாக நிஜமாகவே வீடுகளைச் சொந்தமாக்கும் எண்ணம் இல்லாமல்; ஆதாயம் தேடும் ஆட்டமாக இது உருவாக்கம் பெற்றது.

நாளாக நாளாக இந்த ஆட்டத்தில் பலரும் ஈடுபடத் துவங்க 800,000 திர்ஹாமாக இருந்த இடம் 2 மில்லியனாக உயர்ந்தது.இதில் 95% விழுக்காடும் இடைத்தரகர்கள் வாங்கி விற்று வந்ததால உண்மையான பயனீட்டாளர்கள் அதீத விலை கொடுக்க வேண்டி வந்தது. எனவே வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையக் குறைய இலாப விகிதமும் அதே அளவில் குறையத் துவங்கியது என்றாலும் வாங்குதலும் விற்பதும் எந்த வகையிலும் நிற்காமல் நடக்கத் துவங்கியதால் பெரும் பிரச்னை ஏற்படவில்லை.

ஆனால், நிரந்தரமானதென்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வளர்ச்சிக்கு உலை வைப்பது போல கச்சா எண்ணெய் விலை சரிவு, உலகப் பொருளாதாரப் பின்னடைவு, அமீரக வங்கிகள் பெருவாரியாக முதலீடு செய்திருந்த அமெரிகக் நிதிநிறுவனங்களீல் ஏற்பட்ட வீழ்ச்சி என்று பட்ட காலிலேயே படும் விதமாக அடுக்கடுக்காக சோதனைகள் மேலிடத்துவங்க சந்தையில் இருந்த பணம் நொடியில் காணாமல் போனது. வங்கிகளிடம் பணம் இல்லை. வாங்குபவனிட்ம பணம் இல்லை. விற்பதற்கோ வழியில்லை. என்ன செய்ய முடியும்?

திட்டங்களைத் தொடரத் தேவையான் பணமும் முடக்கப்பட்டு விட்டது. 8 பில்லிய்ன கடன் இருப்பது உண்மைதானென்றாலும் எஙக்ளின் ஆஸ்தி 20 பில்லியன் என்று சொல்லிக் கொள்ளமட்டுமே பெரும் நிறுவனங்களால் முடிகிறது அம்மாதிரியான பெரும் நிறுவனங்கள். நகராச் சொத்துகளை வைத்துக் கொண்டு விழிபிதுங்குகின்றன கட்டுமானத்துறையில் கோலோச்சிய நிறுவனங்கள்.கட்டுமானத் துறை பாதிக்கப்பட்டதால் அதனைச் சார்ந்து இயங்கும் பல்வேறு வணிகங்களும் பெரும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக மொத்த வியாபாரிகள் தகர்ந்தே போனார்கள். இரும்பின் விலை அடக்க முடியாத அளவுக்கு உயர்ந்தபோது பெருமள்வில் முதலீடு செய்தவர்கள் இந்தச் சிக்கலில் இரும்பின் விலை வீழ்ந்ததில் முதுகொடிந்து போனார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் போலப் பல இடங்களிலும் ப்ரவியதால் பொதுவான வணிகமும் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.

உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் பெரும் வருமானத்தைக் கொண்டு வந்த சுற்றுலாவின் தளர்ச்சியும் துபாயைப் பெரிதும் பாதித்திருக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரமும் நலிவ்டைந்துவிட்ட நிலையில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக்க் குறைந்து விட்டது. 90 விழுக்காடு அறைகள் நிரம்பிய நிலையில் உற்சாகமாக இருந்த விடுதிகள் இப்போது 20 விழுக்காட்டிற்கே அவதிப்படுகின்றன.இதனுடைய பாதிப்பு அது சார்ந்த துறைகளில் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதுதானே?!

இந்தத் திடீர் வீழ்ச்சியை சமாளிக்க செலவுகளைக் கட்டுப்படுத்த வேன்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பணியாளர்களைக் குறைக்கத் துவங்கின நிறுவனங்கள். இதுவரை 150,000 பேர் வெளியேறி விட்டார்கள். இந்த் ஆண்டு முடிவதற்குள் மேலும் 200,000 பேர் வெளியேறுவார்க்ள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள். இந்த மந்த நிலை 2009 வரை நிச்சயம் நீடிக்குமெனவும் அதன் பின் உலகப் பொருளாதாரத்தின் சூழலையொத்து சரியாகுமென்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

துபாயின் நிலை இப்படி இருக்க, அபுதாபி ஒரு டிரில்லியன் திர்ஹாம்களை(300 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நகரக் கட்டடமைப்புகளுக்காக மட்டும் செல்வழிக்கப் போவ்தாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வால் கிடைத்த உபரி வருமானத்தை கணக்கில் கொண்டு. இதே உபரி வருமானத்தை அரசு நலப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டுமென்று பொருளாதார நிபுணர்கள் சொல்லியிருப்பதை அபுதாபி ஏற்குமேயானால் தற்போதைய நிலையில் உடனடி மாற்றம் வ்ராதெனினும் மேலதிக சிராய்ப்புகள் தவிர்க்கப்படக் கூடுமென்றும் கருத்து உலவுகிறது

இதற்கிடையில் தனதுநிலையை சரிப்படுத்திக் கொள்ள இந்த ஆண்டுவரைக்குமான செல்வினங்களுக்காக துபாய் 20 பில்லியன் டாலர்களுக்கான கடன் பத்திரங்களை சந்தைக்குக் கொண்டு வருகிறது. அதில் 10 பில்லியன் டாலர்களுக்கான பத்திரங்களை மத்திய வங்கியே வாங்கிக் கொண்டதை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றிருக்கிறார்கள் தொழில் முனைவோர்கள். இது தற்போதைய வற்ட்சியிலிருந்து மீள்வதற்கான அறிகுறி என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அவர்கள்.

அச்சத்தின் நிழல் பரவும் வேளையிலும் யூகங்களும் வதந்திகளும் மிகக் கடுமையாகப் பரவுகின்றன. துபாய் விமானத் தளத்தை விற்று விட்டார்கள் என்று வதந்தி வந்த அடுத்த நாள் மூன்றாவது ஓடு தளம் (Runway) அமைக்கும் பணியில் ஈடுபடப் போவதற்கான அறிவிப்பு வந்தது. துபாய் மெட்ரோவை விற்று விட்டார்கள் என்ற செய்தி வந்ததும் செப்டம் 9ஆம் தேதி திட்டமிட்டபடி மெட்ரோ சேவை துவங்குமென்று அறிவிக்கப்பட்டது. என்வே கற்பனையாளர்கள் இப்போது புர்ஜ் துபாயை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,உலகிலேயே அதிகப் பரிசுத் தொகை கொண்ட துபாய் உலகக் கோப்பை குதிரைப் பந்தயஙக்ள் வழக்கமான கோலாகலங்களோடு மிக அமர்க்களமாக நடந்தேறின
துபாயை அதன் இடைப்பட்ட கால வீழ்ச்சியிலிருந்து மீண்டெடுக்க அரசு மும்முரமாக முனையும் அதே வேளையில் அம்முயற்சிகளால் சாதாரணத் தொழிலாளிகளுக்கு உடனடியாக எந்த வித ஆறுதலும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமான யதார்த்தம். அவனது கவலை அடுத்தநாள் பணியில் இருப்போமா இல்லையா என்பதுதான். பெரும் நிறுவனங்களின் கவலை வேறு மாதிரி இருக்கிறது. அதீதமான கட்டுமான வளர்ச்சிக்காக ஏராளமான ஆட்களை நியமித்த நிறுவனங்கள் இன்று புறத்திட்டுகள் எல்லாம் தற்காலிகமாக நின்று விட்ட நிலையில், எப்படித் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் போகிறோமென்பதுதான் அது.

ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, நீண்ட விடுப்பில் ஆட்களை அனுப்புவதென்று ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை முன்வைக்கின்றன..சில நிறுவனங்க்ள் எல்லாவற்றையும் ஒன்றாகவே செய்யவும் முனைகின்றன. ஒட்டுமொத்தமாக தொழில் அனுமதியை ரத்து செய்து அனுப்பினால் ஓய்வூதியம் போன்ற்வற்றை வழங்க வேண்டுமென்பதால் நீண்ட விடுப்பில் செல்லுமாறு தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை நிறுவனங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

'
இது சுனாமிக்குப் பின்னுள்ள நிலை போலத்தான்' என்றார் நண்பரொருவர். துபாய் மிதமான வளர்ச்சியோடு முன்னேறிய காலகட்டத்தை இப்போது அடைந்திருக்கிறது. 10 மாடி ஏற வேண்டிய நேரத்துக்குள் 100 மாடியைக் கடந்து விட் வேண்டுமென்ற வேகத்தால். 50 மாடிகள் ஏறித் தவறி எட்டாவது மாடியில் விழுந்த கதைதான் இப்போதிருக்கும் நிலை. எண்ணிப் பார்க்க முடியாத சம்பளம், அதீத வளர்ச்சிப் பணிகள் என்ற நிலை மாறி யதார்த்த நிலைக்குத் திரும்பியிருக்கிறது துபாய்.ஆனால் அப்படித் திரும்புவதற்காக அது கொடுத்த விலைதான் அதிகம்.
இதற்கிடையில் துபாயின் பிரம்மாண்டமான புறத்திட்டுகளை அமீரகத்தின் அதிபரான ஷேக் கலீஃபா பின் நஹ்யான் பார்வையிட்டுப் பாராட்டியிருக்கிறார்.’ துபாயின் வளர்ச்சியை எண்ணி அமீரகத்தவர்கள் பெருமைப்படுவதாகவும்அவர் கூறியிருப்பதும், துபாய்க்கு மேலும் 10 பில்லியன் டாலர்களை வழங்க மத்திய வங்கி முன்வந்திருப்பதும் துபாய் வணிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.தோடு மட்டுமேயின்றி அபுதாபி அல்லது நடுவண் கூட்டமைப்பு துபாயின் சிக்கல்களைத் தீர்க்க முன்வராது என்ற யூகங்களுக்கு இதன் மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்பது துபாய் தொழில் முனைவோர்களின் மிகப் பெரும் ஆறுதல். இதன் மூலம் துபாயில் உடனடி நெருக்கடிகள் தீர்க்கப்படும் எனற நம்பிக்கை எழுந்திருக்கிறது என்றாலும்...

தற்போதைய மந்த நிலை எப்போது தீரும் என்று யாரும் உத்தரவாதம் தர முடியாதென்பதுதான் யதார்த்தம். உலகப் பொருளாதாரம் சீர்படத் துவங்காமல் துபாய் மட்டும் எல்லாவற்றையும் சரி செய்து விட இயலாதுதான்.ஆனால் அகலக் கால் வைத்ததால் நிகழ்ந்த இழப்புகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய வ்ழிமுறைகளைத் தேடுகிறது துபாய். துபாயின் மிகச் சிறந்த குணமே மந்த நிலைகள் துவங்கும் பொழுதுகளிலும் அதற்கெதிராக மூர்க்கமாகப் போராடி வெல்லும் அதன் தீவிரத் தன்மைதான். ஆனால், இந்த முயற்சிகள் உடனே கைகொடுக்குமா அல்லது இன்னும் கால அவகாசம் தேவைப்படுமா எனபதுதான் யாருக்கும் விடை தெரியாத கேள்வி.

editor@tamilagamtimes.com