கேள்வி : அறுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் தனிக்கட்டையாக வாழ்ந்து தற்போது அமைதியற்று வாழும் நிலையில் அமைதி தேடி, இந்திய யாத்திரை செல்ல எண்ணியுள்ளேன். காசிக்கு சென்று அங்கே இருந்து விடவும் எண்ணம். தங்களின் கருத்து...
எம்
அன்புள்ள எம் அவர்களுக்கு
காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்ய ஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.
அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம் பொருளை அதில் காண முடியும் என்பது போலத் தான் அதுவும்.
அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்க வேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.
இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.