Thursday, March 14, 2013

ஆல்ஹகாலிக்ஸ்அனானிமஸ்


நண்பர்களே,

 குடியின் வரலாற்றில் முக்கியமான பெயர் வில்லியம் டங்கன் சில்க்வர்த். குடியை ஒரு தனிமனிதனின் பழக்கமாக மட்டும்தான் சமூகம் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னுடைய பலவீனம் காரணமாக, தன்னுடைய விருப்பம் காரணமாக அவன் அதை கடைப்பிடிக்கிறான் என்றார்கள். அவனை உபதேசித்தும் கண்டித்தும் திருத்த முயன்றார்கள். மதம் சார்ந்தும் சமூகச்சட்டங்கள் சார்ந்தும் அவனை கட்டுப்படுத்தினார்கள். தண்டித்தார்கள்.

சில்க்வர்த் அதை ஒரு நோய் என்று விளக்கிய முன்னோடியான அறிஞர். குடிகாரர் ஒரு நோயாளி, குடிநோயாளி. அதை முதலில் அவர் உணரவேண்டும். அது தன்னுடைய வாழ்க்கைமுறை அல்ல, தன் பிடியில் நிற்கக்கூடிய ஒரு பழக்கம் அல்ல என்று அவர் அறிய வேண்டும். ’சாயங்காலமானால் எனக்கு கைகால்கள் உதறும், கொஞ்சம் குளிரும், இது என்னுடைய பழக்கம், நினைத்தால் நிறுத்திக்கொள்வேன்’ என்று மலேரியா நோயாளி சொல்வதைபோன்றது நம்முடைய குடிகாரர்கள் பலர் குடியைப்பற்றிச் சொல்வது.

நமக்குள் இருக்கும் பேய்

-->


எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரை, இதோ அவர் மொழியிலேயே:

நண்பர்களே,
இந்த மேடையில் நான் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு குடிநோயாளியாக இருந்து திருந்தியவர்களுக்காக உருவாக்கபப்ட்டது. குடிகாரர்கள் குடிகாரர்களிடம் பேசும் அமைப்பு. நான் ஒரு முன்னாள் குடிகாரன் என்று சொன்னபிறகுதான் இங்கே பேசவே ஆரம்பித்தார்கள். நான் இன்றுவரை குடித்ததில்லை. மதுவகைகளின் வாசனைகளையும் நிறங்களையும் கூட என்னால் சொல்லிவிட முடியாது. அப்படியானால் இங்கே எனக்கு என்ன இடம்?
நண்பர்களே, நான் என் நண்பர்களிடம் இப்படிச் சொல்லிக்கொள்வதுண்டு. ‘நான் ஒரு குடிக்காத குடிகாரன்அதைத்தான் இங்கே பேசுவதற்கு எனக்கிருக்கும் தகுதியாக இங்கே சொல்லிக்கொள்வேன்.