நியாயமான
உணர்வு ( காதல் - கோபம் - சோகம் - நெகிழ்ச்சி ... ) வடிகால் கொண்ட மனிதர்கள்தான் மாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன் பெற்றிருப்பார்கள் என உளவியலாளர்கள் கருதிகிறார்கள். இந்த குண அமைப்பில் குறைபாடு கொண்ட மனிதர்கள்தான் தங்கள் கொள்கையில் தீவிரவாதிகளாகவும், முரட்டு பிடிவாதம் கொண்ட அரசியல்வாதிகளாகவும் - சமூகத்தில் பொது நியாயங்களை மீறும் குணம் கொண்டவர்களாகவும் உருவாகிறார்கள்.உடல்
ஆரோக்யமானவர்கள் கூட பயணிக்க முடியாத அளவுக்கு குண்டும் - குழியுமான - தூசு படிந்த - சப்தங்கள் நிறைந்த - சாலை விதிகளை தெரிந்தோ / தெரியாமலோ சாலையில் குறுக்கிடும் மனிதர்கள் நிறைந்த நம் சாலை பயணத்தில், நமக்கு எழும் கோபம் நியாயமானது. அதை
போலவே நம் எண்ணங்கள் பயணிக்கும் சமூக - அரசியல் சாலைகள், மேற்கூறிய குறைபாடுள்ள மனிதர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த சூழலை குறைக் கூறுவதோடு நிற்காமல் அதை சீர் செய்யவும் - தரமான தளம் அமைக்கவுமான ஒரு முயற்சிதான் இந்த இணைய தளம். நமது
நியாயமான கோபம் ஒரு புறம் இருக்கட்டும். இதனால் நம் சமகால சந்ததிக்கும் - நம் அடுத்த சந்ததிக்கும் உள்ள ஆபத்து என்ன தெரியுமா ? சாலை விதி மீறிய போக்குவரத்துள்ள ஒரு சாலையை உருவாக்கி நம் சந்ததிக்கு விட்டு செல்ல போகிறோம். நம் சந்ததிகளின் எதிர்கால நிலையை நினைத்து பாருங்கள் ? அன்றாடம்
நம் வாழ்க்கையில் பிரதிப்பலிப்பை ஏற்படுத்த கூடிய ஒரு சமூக / அரசியல் தளம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது - நமக்கும் நம் அடுத்த சந்ததிக்கும் ஆபத்து அல்லவா ? நம்மிடம் அரசியல்
/ சமூக அநீதிகளை எதிர்க்கும் போதிய போராட்ட குணம் இல்லை என்பதைக் கூட நான் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் போராட்ட குணம் மட்டும் ஒருவரிடம் இருந்தால் அது அநீதியை எதிர்க்க மட்டுமே பயன்படும். அதோடு மாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன் இருந்தால் மட்டுமே அநீதிகளற்ற ஓரு மாற்று சமூகம் அமைக்கமுடியும். சமூக
/ அரசியல் மற்றும் தனி நபர் முன்னேற்றத்திற்கான கொள்கைகளில் மாற்றங்கள் நிகழ்த்தவும் - மறு நிர்ணயம் செய்யவும் உதித்த தலைவர்களாகட்டும், இந்த மாற்றத்தை செய்வதாகக் கூறிக் கொண்டு உருவான சமூக / ஆன்மீக / அரசியல் அமைப்புகள் வந்த பின்பும், இந்த உலகில் ஏன் இத்தனை யுத்தங்கள் - பட்டினி சாவுகள் - இனவாத போரட்டங்கள் - தனி நபர் ஒழுக்கம் குறைந்த சமுதாயம் உருவாகின ? ஏன் இப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து மறு உருவாக்கம் செய்யும் பயணம்தான் இந்த இணைய தொடக்கம். மாற்றங்கள் - மாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன் - நம்மிள்ளிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதால் புறச் சூழலை மட்டும் இல்லாமல் நம்முடைய அகச் சூழலையும் ( நம் எண்ணங்களால் உருவாகும் குணங்கள் ) ஆரோக்யமாக உருவாக்கும் , உருவாக்கங்கள் நிறைந்த தளம்தான் இந்த இணையம். ஆதலால்தான் இந்த இணையத் தளத்திற்கு தமிழ் அகம் என பெயர் சூட்டினோம்
No comments:
Post a Comment